அறக்கட்டளை
மிகக்
குறைந்த கட்டணத்திலும், கட்டணமில்லாமலும் பள்ளிப்
பொறுப்பாளர்களின் சொந்த உழைப்பையும் வளத்தையும் தமிழ்ச்
சமூகத்தின் சிறு பங்களிப்பையும் கொண்டே 33 ஆண்டுகளாக
இயங்கி வரும் இப்பள்ளிகள், தற்போது கடும் நிதி
நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. உயர்ந்து வரும்
வாழ்க்கைச் செலவுகளுக்கேற்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு
முறையான ஊதியம் தரவும், பள்ளிக் கட்டுமானங்களைச்
சீர்ப்படுத்தவும் மேம்படுத்தவும்.18 பள்ளிகளுக்கும்
சேர்த்துப் பெரும் நிதி தேவைப்படுகிறது.
தாய்த்தமிழ்
காக்கவும், அதன்மூலம் தமிழ்ச்சமூகம் காக்கவும்,
பாடாற்றுவது ஒருசில தனிமனிதர்கள் அல்லது ஒரு சிறு
குழுவினர் செய்து முடிக்கும் பணியன்று. அது தமிழ்ச்சமூகமே
தோளொடு தோள் நின்று செய்து முடிக்கவேண்டிய தவிர்க்கவியலாப்
பணியாகும்.
தமிழ்ச்
சமூகத்தின் நிதிப் பங்களிப்பை முறையாகப் பெற்றுப்
பயன்படுத்த 18 பள்ளிகளும் இணைந்து தாய்த்தமிழ்க்
கல்விப்பணி என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளோம். இந்த
அறக்கட்டளை, அரசின் ஏற்பிசைவு பெற்று முறையாகப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கு வழங்கும் நிதிக்கு, வருமான வரித்துறையின்
80G வரிவிலக்குத் தகுதி உண்டு.
வங்கிக் கணக்குத் தகவல்களையும், வரிவிலக்குத் தகவல்களையும்
இணைத்துள்ளோம். தாய்த்தமிழ் காக்கவும், தமிழ்ச்சமூகம்
காக்கவும், நிதி தாருங்கள் என்று 33ஆண்டுகள் இப்பணியை
முன்னெடுத்த உரிமையோடும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையோடும்
கேட்கின்றோம்.
தாய்த்தமிழ் காத்துத் தமிழ்ச் சமூகம் காக்க உங்கள்
பங்களிப்பை நல்குங்கள்.